சாம்பார், வெண்டைக்காய் சாம்பார்   1 comment

சாம்பார்

வெண்டைக்காய் சாம்பார்

சாம்பார்

வெண்டைக்காய் சாம்பார் 

துவரம் பருப்பு: 1 ½  கப் வேகவைத்து மசித்துக்கொள்ளவும்

வெண்டைக்காய்: 100 கிராம், 1 இன்ச் நிளமாக நறுக்கவும்

சாம்பார் வெங்காயம்: 8-12 தோல் உரித்தது

தக்காளி: 4 சிறிதாக நறுக்கியது

பச்சை மிளகாய்  : 2 கீறிக்கொள்ளவும்

புளி : சிறிய நெல்லி அளவு

சாம்பார் தூள் : 4 தேக்கரண்டி

மஞ்சள் தூள்: 1 தேக்கரண்டி

உப்பு : தேவைக்கேற்ப்

தாளிக்க தேவையானவை  

எண்ணெய்/நெய் : 1 மேசைக்கரண்டி

கடுகு : 2 தேக்கரண்டி

வெந்தயம்: 1 தேக்கரண்டி

சிரகம்    :2 தேக்கரண்டி

பெருங்காயத்தூள்: 1 சிட்டிகை

கறிவேப்பிலை: 1 கொத்து

மல்லியிலை: 1 பிடி சிறிதாக நறுக்கியது

செய்முறை:  குழம்பு வைக்கும் பாத்திரத்தில் எண்ணெய்/நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சிரகம், பெருங்காயத்தூள், சேர்த்து பொறியவிடவும், பின்னர் சாம்பார் வெங்காயம், நறுக்கிய

வெண்டைக்காய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும், காய் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும், வதங்கியதும் புளியுடன், உப்பு , மஞ்சள் தூள், சாம்பார் தூள் தண்ணீர் சேர்த்து கரைத்து காயில்  ஊற்றி வேகவைத்த பருப்பை சேர்க்கவும் நன்கு கொதி வந்ததும் – (அதாவது பச்சை வாசம்போகும் வரை) பின்னர் மல்லி தழை தூவிடவும்.

மணத்தக்காளி காய் குழம்பு, காரக்குழம்பு   Leave a comment

த்தக்காளி காய் குழம்பு: 

மணத்தக்காளி கீரை வாங்கும் போது காய்களை பிரித்து எடுத்துக்கொள்ளவும்/வற்றலும் உபயோகிக்கலாம்.

செய்யதேவையானவை:மணத்தக்காளி காய்    : 1  கப்/ தேவையான அளவு

சாம்பார் வெங்காயம் : 8 (ஒன்று, இரண்டாக தட்டிக்கொள்ளவும்)

பூண்டு              : 2 (முழுசாகவும், ஒன்று, இரண்டாகவும் தட்டிக்கொள்ளவும்).

mannathakkali kuzhambu

mannathakkali kuzhambu

தக்காளி             : 3 சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்

குழம்பு மசால் தூள்  : 2 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள்        : 1 தேக்கரண்டி

பெருங்காயத்தூள்    : 1 சிட்டிகை

புளி                 : 1 எலுமிச்சை அளவு

உப்பு                : தேவைக்கேற்ப

தாளிதம் செய்ய     : 2 மேசைக்கரண்டி நல்லெண்ணெய்

வெந்தயம்           : 1 தேக்கரண்டி

கடுகு               : 2 தேக்கரண்டி

அல்லது            : 1 கறி வடகம்

செய்முறை :  பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்க வேண்டிய வெந்தயம், கடுகு / 1 கறி வடகம் சேர்த்து பொறிய  விடவும், பின்னர் சாம்பார் வெங்காயம், பூண்டு சேர்க்கவும், நன்கு வதங்கிய பின் நறுக்கிய தக்காளி சேர்த்து கிளறி மூடி சிறிய தீயில் வைக்கவும். தக்காளி நன்கு வெந்ததும்

மசால் தூள், மஞ்சள் தூள், கழுவிய மணத்தக்காளி காய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து லேசாக கிளறவும், கரைத்த புளியை அதில் சேர்த்து கொதிக்கவிடவும், எண்ணெய் வெளியறும் வரை வைக்கவும், இறக்கிய பின் சிறிது வறுத்து பொடி செய்த எள் / நல்லெண்ணெய் 2 தேக்கரண்டி சேர்க்கவும்.   

சுட்ட அப்பளத்துடன் பரிமாறவும்.

உப்புமா / கிச்சடி, (கோதுமை ரவை)   Leave a comment

கோதுமை ரவை உப்புமா / கிச்சடி

செய்யதேவையானவை

கோதுமை ரவா                : 1 கப் (சம்பா கோதுமை)

தண்ணீர்                                  : 5 கப்

uppuma,kichidi,wheat cooking,diabetic diet,

சாம்பார் வெங்காயம்    : 5 சிறிதாக நறுக்கியது

தக்காளி                                   : 1 சிறிதாக நறுக்கியது

பச்சை மிளகாய்               :  1 சிறிதாக நறுக்கியது

இஞ்சி                                       : 1 துண்டு சிறிதாக நறுக்கியது

பூண்டு பல்                           :  2 சிறிதாக நறுக்கியது (விரும்பினால்)

காய்கள் கலவை             : கரட், பீன்ஸ், பட்டானி, துறுவிய கோஸ் 1 கப் (விரும்பினால்)

தாளிதம் செய்ய  : கடுகு 2 தேக்கரண்டி,

உளுத்தம் பருப்பு : 2 தேக்கரண்டி

கடலை பருப்பு   : 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை   : 1 கொத்து

மல்லித்தழை  : 1 பிடி சிறிதாக நறுக்கியது

எண்ணெய்     : 2 மேசைக்கரண்டி

உப்பு                  : தேவைக்கேற்ப.

செய்முறை: ரவையில் சிறிது எண்ணெய் ஊற்றி வாசம் வரும் வரை வறுக்கவும்.

பாத்திரத்தில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி, தக்காளி சேர்த்து வதக்கி, காய்கறிகளையும் சேர்க்கவும். உப்பு சேர்த்து மூடியிட்டு வேகவிடவும். காய்கறி பாதி வெந்ததும், தண்ணீரை அளந்து ஊற்றவும்(1 கப்புக்கு 5 கப்).

தண்ணீர் கொதிவந்ததும் வறுத்துவைத்த ரவையை சேர்த்து கட்டி சேராமல் கிளறி மூடியிட்டு வேகவிடவும். ரவை நன்கு வெந்ததும் சிறிதாக நறுக்கிய மல்லி தழை சேர்த்து இறக்கிவைக்கவும்.

சக்கரை, தேங்காய் சட்டினி, தக்காளி சட்டினி, சாம்பாருடன் சாப்பிடலாம்.

சேணைக்கிழங்கு வறுவல் (மண்டை கிழங்கு)   Leave a comment

சேணைக்கிழங்கு வறுவல் (மண்டை கிழங்கு)

சேணைக்கிழங்கு: ¼ கிலோ

(சிறிதாக, மெல்லியதாக நறுக்கி, புளி சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.)

சமயல்,சேப்பங்கிழங்கு,

குழம்பு மசால் தூள்: 2 மேசைக்கரண்டி

பூண்டு பல்: 4 தட்டிக்கொள்ளவும்

சோம்பு: 2 தேக்கரண்டி

உப்பு: தேவைக்கேற்ப

எண்ணெய்: 2 மேசைக்கரண்டி

செய்முறை: அடி கணமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு, பூண்டு சேர்த்து வதக்கவும், வதங்கிய பின் வேகவைத்த சேணைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து பிரட்டவும்,

அடுப்பு தீயை குறைத்து, சிறிய தீயில் நன்கு வறுபடும் வரை வைத்து எடுக்கவும்.

சமோஸா   Leave a comment

சமோஸா

செய்யத் தேவையானவை:

மேல்மாவிற்கு : மைதா மாவு (1 கப்)

Samosa

Samosa - சமோஸா

சிறிது உப்பு

பூரி மாவு பதத்திற்கு பிசைந்து மிக மிக மெல்லிய பூரிகளாக தேய்க்கவும்.

பூரணத்திற்கு : கோஸ் துறுவியது ,காரட் துறுவியது, வெங்காயம் சிறிதாக நறுக்கியது எல்லவற்றையும் சம அளவு எடுத்துக்கொள்ளவும், சிறிதாக நறுக்கிய கறிவேப்பிலை,கொத்த மல்லி தழை, விருப்பப்பட்டால் இஞ்சி-பூண்டு சிறிதாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும்.

பாத்திரத்தில் சிறிது எண்ணை ஊற்றி காய்ந்ததும்  நறுக்கிய காய்களை, சிறிது மசால் தூள், உப்பு சேர்த்து  லேசாக வதக்கி ஆறவிடவும்.

வட்டமாக தேய்த்த பூரியை பாதியாக கத்தியால் அரை  நிலா வடிவமாக வெட்டி பிறித்துக்கொள்ளவும்.

வெடிய பாதியை முக்கோண வடிவாக மடித்துக்கொள்ளவும் (சுண்டல் பொட்டலம் மடிப்பதுபோல் மடித்துக்கொள்ளவும்)

இதில் சிறிது வதக்கிய பூரணத்தை வைத்து ஓரங்களில் தண்ணீர் தொட்டு ஒட்டவும். பின்னர் காய்ந்த எண்ணையில் பொன் நிறம் வரும்வரை பொறித்து எடுக்கவும்.

ஆப்பம்   1 comment

ஆப்பம் 

தேவையானவை: பச்சரிசி 1 கப்

புலுங்கல் அரிசி: 1 கப்

உளுந்து : 1 மேசைக்கரண்டி

வெந்தயம்: ½ தேக்கரண்டி

துறுவிய தேங்க்காய் பூ : 1 மேசைக்கரண்டி(விரும்பினால்)

உப்பு: தேவைக்கேற்ப்ப

ஆப்பசோடா: ½ தேக்கரண்டி

தேங்காய்  பாலுக்கு தேவையானவை

(ஆப்பம் தயாரிக்கும் போது தேங்காய் பால் தயாரிக்கவும்)

1தேங்காய் துறுவி பால் எடுத்துக்கொள்ளவும்

அதில் ஏலக்காய், சுக்கு பொடித்து போடவும்.

தேவையான சக்கரை சேர்க்கவும். 

மாவு செய்முறை:  ஊறிய அரிசியை ,வெந்தயம், துறுவிய தேங்க்காய் பூ, உளுந்துடன் சேர்த்து அறைக்கவும். உப்பு சேர்த்து புளிக்கவைக்கவும்.

செய்முறை:  புளித்த மாவில் ஆப்பம் சுடுவதற்க்கு சிறிது நேரத்திற்க்கு முன் ஆப்பச்சோடா, சிறிது  தேங்காய் பாலுடன் கலந்து தோசைமாவு பதம் வைக்கவும்.

ஆப்பசட்டியில் எண்ணை தடவி,  மாவு ஊற்றி மாவு எல்லா பக்கமும் படுமாறு சுற்றவும் மூடியிட்டு வெந்ததும் எடுத்து தேங்காய் பாலுடன்  பறிfமாறவும்.

மொறு மொறு தோசை   Leave a comment

தேவையானவை:

புழுங்கல் அரிசி: 3 கப்

பச்சரிசி: 1கப்

உளுந்து: 1 கப்

வெந்தயம்: 1 தேக்கரண்டி

உப்பு : தேவையான அளவு

செய்முறை: அரிசியை ஒன்றாக சேர்த்து ஊறவைக்கவும், உளுந்தை தண்ணீர்விட்டு கழுவியபின் ஊறவைக்கவும், வெந்தயத்தை சிறிது  தண்ணீர் சேர்த்து ஊறவிடவும் நன்கு ஊறியப்பிறகு (3 மணி நேரம்),

உளுந்தையும்,வெந்தயத்தையும் சேர்த்து நன்றாக உளுந்து பொங்கிவரும்வரை அரைக்கவும், பின்னர் அரிசியை அரைக்கவும் மாவு மைப்போல் வரும்வரை அரைத்து, அதில் அரைத்த உளுந்து, உப்பு, சேர்த்து சுற்றவும், பாத்திரத்தில் மாற்றி இறுக்கி மூடவும். 7-8 மணி நேரதில் புளித்துவிடும், மெது இட்லி, மொறு மொறு தோசைக்கு சரியாக இருக்கும்.

மெது இட்லி   Leave a comment

மெது இட்லி:

தேவையானவை:

இட்லி அரிசி: 3 கப்

பச்சரிசி: 1கப்

உழுந்து: 1 கப்

வெந்தயம்: 1 தேக்கரண்டி

உப்பு : தேவையான அளவு

செய்முறை: அரிசியை ஒன்றாக சேர்த்து ஊறவைக்கவும், உழுந்தை தண்ணீர்விட்டு கழுவியபின் ஊறவைக்கவும், வெந்த்யதை சிறிது  தண்ணீர் சேர்த்து ஊறவிடவும் நன்கு ஊறியப்பிறகு (3 மணி நேரம்),

உழுந்தையும்,வெந்தயத்தையும் சேர்த்து நன்றாக உழுந்து பொங்கிவரும்வரை ஆரைக்கவும், பின்னர் அரிசியை அரைக்கவும் மாவு மைப்போல் வரும்வரை அரைத்து, அதில் அரைத்த உழுந்து, உப்பு, சேர்த்து சுற்றவும், பாத்திரத்தில் மாற்றி இறுக்கி மூடவும். 7-8 மணி நேரதில் புளித்துவிடும், மெது இட்லி, மொறு மொறு தொசைக்கு சரியாக இருக்கும்.

வெண்டைக்காய் வறுவல்   2 comments

வெண்டைக்காய் வறுவல்

தேவையானவை: வெண்டைக் காய்¼ கிலோ,1”ன்ச் நீளமாக நறுக்கியது

பெறிய வெங்காயம்:  2 நீளமாக நறுக்கியது

கறிவேப்பில்லை: 1 கொத்து

இஞ்சி,பூண்டு விழுது- 2 தேக்கரண்டி

சோள மாவு- 2 மேசைக் கரண்டி

அரிசி மாவு-  1 மேசைக் கரண்டி

மைதா மாவு- 2 மேசைக் கரண்டி

கறம் மசாலா- 2 தேக்கரண்டி

வினிகர்- 1 மேசைக் கரண்டி

சோயா சாஸ்- 1/2 மேசைக் கரண்டி

கேசரி கலர்- 1 பின்ஞ்

உப்பு – தேவைக்கேற்ப்ப

பொறிபதற்க்கு எண்ணெய்

செய்முறை: வெண்டைக் காய்¼ கிலோ,1”ன்ச் நீளமாக நறுக்கி, கழுவி துணியால் துடைக்கவும், வெங்காயம் நறுக்கியது, கறிவேப்பில்லை,மீதமுள்ள எல்லாவற்றையும் சேர்த்து, பிரட்டி எடுக்கவும், தேவைப்பட்டால் தண்ணீர் தெளிக்கலாம், சிறிது நேரம்(15 நிமிடமாவது) வைத்து பொறித்து எடுக்கவும்.

  • மாவு எல்லாப்பக்கமும் படுமாறு பிரட்டவும்.

பலா கறி (பலா மூஸ்)   1 comment

பலா கறி (பலாக்காய் சிறியது)

தேவையானவை : பலா காய் 1 கப் (தோல் சீவி சிறிதாக நறுக்கி வெகவைத்தது)

இஞ்சி, பூண்டு விழுது-2 மேசைக்கரண்டி

சம்பார் வெங்காயம்-8 சிறிதாக நறுக்கியது

தக்காளி- 2 சிறியது( விழுது)

பச்சை மிளகாய்-2 கிறிக்கொள்ளவும்

தேங்காய் விழுது-2 தேக்கரண்டி

கறிவெப்பில்லை- 1 கொத்து

மஞ்சள் தூள்-1 தேக்கரண்டி

மிளகாய் தூள்-2 தேக்கரண்டி

கறம் மசாலாத்தூள்- 1 தேக்கரண்டி

மல்லித்தூள்-2 தேக்கரண்டி

உப்பு: தேவைகேற்ப்ப

எண்ணெய் -2 மேசைக்கரண்டி

செய்முறை: வாணியில் எண்ணெய் ஊற்றி, இஞ்சி, பூண்டு விழுது வதக்கி,  வெங்காயம், கறிவெப்பில்லை சேர்த்துக்கொள்ளவும். பச்சை வாசம் போனபின் தக்காளி விழுது,பச்சை மிளகாய் சேர்க்கவும், வெகவைத்த பலா துண்டுகளை(கறி பலா, பிலா மூஸ்) சேர்த்து நன்றாக் வதக்கவும், எண்ணெய் வரும் வரை வதக்கி இற்க்கவும்.

* சாதம், இட்லி, சப்பாதியுடன் சப்பிடலாம்.

சிக்கன் வறுவல்   1 comment

சிக்கன் வறுவல்

கலவை செய்ய :

இஞ்சி, பூண்டு விழுது- 2 தேக்கரண்டி

எழுமிச்சை சாறு- ½ பழம் /வினிகர்- 1 தேக்கரண்டி

தயிர் – 3 தேக்கரண்டி

அஜினோமோட்டொ- 1 பிஞ்(விரும்பினால்)

சோயா சாஸ்(திக்) – 1 தேக்கரண்டி(விரும்பினால்)

கேசரி கலர்-தேவைக்கேற்ப்ப

கறம் மசாலா தூள்- 1 தேக்கரண்டி

சோள மாவு-4 மேசைக்கரண்டி

உப்பு – தேவைகேற்ப்ப

பொறிப்பதற்க்கு: தேங்காய் எண்ணெய், ரீபைண்டு ஆயில்.

செய்முறை: சிக்கனை சுத்தம் செய்து, அனைத்து மசாலா சேர்த்து குறைந்தது 1 மணி நேரம் ஊறவிடவும்( ப்ரிஜ்ஜில் வைக்கலாம்)

வாணியில் தேங்காய் எண்ணெய், ரீபைண்டு ஆயில் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அடுப்பை சிமில் வைத்து சிக்கனை மொறு மொறு வரும்வரை பொறித்து எடுக்கவும்.

லமன், ஆணியன், டொமட்டொ சாஸுடன் சாப்பிடலாம்.

தொழில்…   3 comments

தொழில்

பக்கத்து வீட்டு பெண்னை

புதுமைப்பெண்ணாக

மாறச் சொல்லுகிறாய்

உன் சொந்த பெண்ணை

உணர்ச்சியற்ற பதுமையாக

மாற்றிருக்கிறாய்

கணவனாய் கொண்டவளை

காரித்துப்புகிறாய் !

கதவுக்குப்பினால் கட்டிய மனைவியை

காலால் உதைக்கிறாய் !

உன்

கவிதை,கட்டுரை,கதைகளில்

பெண் இனத்தை பெறுமைபட போற்றுகிறாய் !

சபை நடுவில் சகஜமாக சம உரிமை பேசுகிறாய்

சாண்றோரையும் உன் பக்கம் சாய வைக்கிறாய்

பெண்கள் சாதிக்கவேண்டும் என்று அவர்களும் ஒருசேர

உன்னோடு ஓங்க வைக்கிறாய்…

படு ஜோராய் அரங்கேறுகிறது

பாரதியின் வேஷம் !

யாருக்கு தெரியும் உன் வீட்டின்

பெண்களின் நிலை…….?!

காதல் கணப் பொழுதில்..   2 comments

காதல் கணப் பொழுதில்..

பார்வை  பூக்கள் எய்து

மனதை பறித்தாய்,                         

புன்னகை முகத்தால்

இதயத்தில் பூகம்பம்

செய்தாய்,..

மழைக்கு நனைந்த

பறவை  ஆனென்..

உன் மெளன மொழி

என் அகராதியில்..

ஆயிரம் அர்த்தம் சொல்லியது

என் தமிழும் தலை நிமிர்ந்து நடை பழகியது

நீ என்ன வேலைவாய்ப்பு அலுவலகமா?!!

வெட்டியாய் கிடக்கும் எனக்கு

கவிஞன் என்னும் வேலைக்கொடுக்க…

தக்காளி சாதம்   1 comment

தக்காளி சாதம்

செய்ய தேவையானவை: பச்சரிசி 1க்ப் (1/2 மணி நேரம் ஊறவிடவும்)

தக்காளி ¼ கிலோ(3-4,) விழுதாக அரைக்கவும்

இஞ்சி,பூண்டு விழுது- 3 தேக்கரண்டி

வெங்காயவிழுது-5 தேக்கரண்டி

பச்சைமிளகாய் -3(இரண்டாக நறுக்கியது)

புதினா,கொத்தமல்லி தழை- 1 பிடி

கரம் மசாலா-2 தேக்கரண்டி

நெய்-2 மேசைக்கரண்டி

எண்ணெய்- 1 மேசைக்கரண்டி

செய்முறை: அடிகனமான பாத்திரம் அல்லது குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி, இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும்வரை வதக்கவும், பின்பு வெங்காயவிழுது, பச்சைமிளகாய் (இரண்டாக நறுக்கியது) புதினா,கொத்தமல்லி இலை,கரம் மசாலா, தக்காளி விழுது சேர்த்து பச்சை வாசம்போகும் வரை வதக்கி அரிசிக்கு 1:2 தண்ணீர் சேர்த்து கொதிவந்தது அரிசி, உப்பு சேர்த்து மூடியிட்டு மிதமான வெகவிடவும்,(குக்கரில் 3 விசில் வைக்கவும்)

* விரைவாக, சுலபமாக, ருசியாக செய்யக்கூடிய முறை இது.

* தயிர் பச்சடியுடன் சாப்பிடலாம்

பாவற்காய் வறுவல்   Leave a comment

தேவையானவை: பாவற்காய் ¼ கிலோ(மெல்லிசாக வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்)

சாம்பார் வெங்கயம்-15(சிறிதாக நறுக்கியது)

பச்சை மிளகாய்-1(சிறிதாக நறுக்கியது)

கறிவேப்பிலை-1 கொத்து

சாம்பார் பொடி-2 தேக்கரண்டி

மஞ்சள் பொடி-1 தேக்கரண்டி

மிளகாய் பொடி-1 தேக்கரண்டி

உப்பு தேவைக்கேற்ப்ப்

எண்ணெய்-3 மேசைக்கரண்டி

செய்முறை: அடிக்கனமான பாத்திரத்தை அடுப்பிவைத்து, சூடானதும்,  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும், வதங்கியதும் கிறிவேப்பிலை, பாவற்காய், உப்பு, சேர்த்து வதக்கவும், மூடியிட்டு, மிதமான தீயில் வேகவிடவும், பாதி வெந்ததும், சாம்பார் பொடி,மஞ்சள் பொடி,மிளகாய் பொடி சேர்த்து, மூடி போடாமல், சிறியத்தீயில் வைத்து வதக்கவும், அடிக்கடி கிளறாமல் வேகவிடவும், நன்கு பொன் நிறம் வரும்வரை வறுக்கவும்.

*சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதத்துடன் சேர்த்து

எண்ணை கத்தரிக்காய் குழம்பு   2 comments

எண்ணை கத்தரிக்காய் குழம்பு

செய்யத்தேவையானவை:

கத்தரிக்காய் சிறியது: 1/4 கிலோ(முழுக்கத்தரிக்காய் காம்பு நீக்காமல் நான்காக கிறிக்கொள்ளவும்)

சாம்பார் வெங்காயம்: 10 சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்

வெள்ளைப்பூண்டு: 10 சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்

தக்காளி: 3 சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்

பச்சை மிளகாய்- 4 காம்பு நீக்கி கிறிக்கொள்ளவும்

புளி: 1 சிறி எலுமிச்சம்பழ அளவு( ஊறவைத்து தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.)

சாம்பார் பொடி: 2 மேசைக்கரண்டி

பெருங்காயப்பொடி: சிறிது

வற்றல் மிளகாய்- 4

வெந்தயம்: 1 தேக்கரண்டி

கடுகு: 1 தேக்கரண்டி

கறிவேப்பில்லை- 1 கொத்து

மல்லித்தழை- 1 பிடி சிறிதாக நறுக்கியது

நல்ல யெண்ணை-3 மேசைக்கரண்டி

உப்பு தேவைக்கேற்ப

செய்முறை:  அடிகணமான சட்டியில் நல்ல யெண்ணை 2 மேசைக்கரண்டி ஊற்றி அடுப்பில் வைக்கவும் யெண்ணை சூடேறியதும்,சிறியதீயில் கடுகு, வெந்தயம், வத்தல், வெடிக்கவிடவும், கறிவேப்பில்லை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும், நன்கு வதங்கியதும் தக்காளி சிறிதாக நறுக்கியதை சேர்த்து வதக்கவும், இதில் கத்தரிக்காய் உப்பு சேர்த்து வேகவிடவும்,(காய் உடையாமல் கிளறவும்) சாம்பார் பொடி, பெருங்காயப்பொடி புளி ஊறவைத்து பிசைந்த தண்ணீரையும் காயுடன் சேர்த்து

கொதிக்கவிடவும். இதில் மீதமுள்ள நல்ல யெண்ணை சேர்த்து கொதிக்கவைக்கவும். யெண்ணை வெளியெ வரும்போது மல்லிதழைத்தூவி இறக்கவும்.(பிடித்தவர்கள் சிறிது வெல்லம் சேர்க்கலாம்)

குழிப்பணியாரம் காரம்   Leave a comment

கார குழிப்பணியாரம்

செய்ய தேவையானவ: பச்ச அரிசி 1/2 கப்,

புழுங்கலரிசி 1/2 கப்

உழுந்து-1/2 கப்

வெந்தயம்-1 தேக்கரண்டி

இட்லிக்கு அறைப்பது போல் அறைத்து உப்புச்சேர்த்து புளிக்கவைத்துக்கொள்ளவும்.

தாளிதம் செய்ய: கடுகு, உழுந்து, கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பு,மிளகு, பெருங்காயம், கறிவேப்பில்லை தாளித்து, இதில் சிறிதாக நறுக்கிய மல்லித்தழை, பீன்ஸ்,பச்சை மிளகாய், துறுவிய கரட், மாவுடன் கலக்கவும். குழிப்பணியாரச்சட்டியில் நல்லயெண்ணை ஊற்றி, மாவை சிறு கரண்டியால் ஊற்றி, சிறிது நேரம் கழித்து சிறு கரண்டியால் திருப்பி, இருபுறமும் பொன்னிற்ம் வரும்வரை  வேகவைத்து ஊசியால் எடுக்கவும்.

தக்காளி, காரச்சட்டினியுடன் சாப்பிடலாம்

அடுப்பை நன்றாக சூடு செய்தபின்னர், மிதமான தீயில்வைத்து சமைக்கவும்

குழிப்பணியாரம், இனிப்பு   2 comments

குழிப்பணியாரம்

இனிப்பு குழிப்பணியாரம்

செய்ய தேவையானவ: பச்ச அரிசி 1/2 கப்,

புழுங்கலரிசி 1/2 கப்

உழுந்து-1/2 கப்

வெந்தயம்-1 தேக்கரண்டி

வெல்லம் 1 கப் (துறுவியது)

சுக்கு: 1 சிறியத்துண்டு(பொடிதுக்கொள்ளவும்)

ஏலக்காய்: 4(நுணிக்கியது)

தேங்காய்- 1 சில்லு சிறிதாக நறுக்கியது

முந்திரி பருப்பு- 10 சிறிதாக நறுக்கியது

இவைகளை நெய்யில் வறுத்து மாவுடன் கல்லில் ஊற்றும் முன் கலக்கவும்

செய்முறை: மாவை இட்லி மாவு அறைப்பது போல் அறைத்து உப்பு சேர்த்து புளிக்கவைக்க்கவும், பின்பு சுக்கு பொடித்தது,நெய்யில் வருத்த தேங்காய், முந்திரிம், வெல்லம் துறுவியது சேர்த்து, குழிப்பணியாரச்சட்டியில் நெய்/ யெண்ணை( இனிப்பிற்க்கு) ஊற்றி, மாவை சிறு கரண்டியால் ஊற்றி, சிறிது நேரம் கழித்து சிறு கரண்டியால் திருப்பி, இருபுறமும் பொன்னிற்ம் வரும்வரை  வேகவைத்து ஊசியால் எடுக்கவும்.

இதனை சுக்கு, ஏலம் கலந்த வெல்லப்பாகுடன் சேர்த்து சாப்பிடலாம்.

அடுப்பை நன்றாக சூடு செய்தபின்னர், மிதமான தீயில்வைத்து சமைக்கவும்.

எலும்மிச்சை சாதம்   Leave a comment

எலும்மிச்சை சாதம்

தேவையானவை:  உதிரியாக சமைத்த சாதம்(புழுங்கல் /பச்சை) 1 கப்

எலும்மிச்ச பழம்:  1 பெரியது(சாறு)

மஞ்சள் தூள்-1 மேசைக்கரண்டி

பெருங்காயத்தூள்-1 தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

கறிவேப்பில்லை-1 கொத்து

மல்லித்தழை- சிறிதாக நறுக்கியது

தாளிதம் செய்ய:  நல்ல யெண்ணை 2 கரண்டி

கடுகு- 1 தேக்கரண்டி

உழுந்து- 2 தேக்கரண்டி

கடலைப்பருப்பு- 2தேக்கரண்டி

மிளகாய் வத்தல்-4

இஞ்சி  -1 சிறிதாக நறுக்கியது

பச்சை மிளகாய்- 2 சிறிதாக  நறுக்கியது

செய்முறை:  சாததில் உப்பு, எலும்மிச்சம் பழச்சாறு, கறிவேப்பில்லை,  சேர்த்து கிளறிக்கொள்ளவும்.

வாணலியில் யெண்ணை  ஊற்றி

கடுகு,  உழுந்து,  கடலைப்பருப்பு, மிளகாய் வத்தல் தாளித்து இதில் இஞ்சி, பச்சை மிளகாய் நறுக்கியது பெருங் காயம் , மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

சாத்தில் தாளித்ததை சேர்த்துக்கிண்டவும்.

மல்லித்தழை தூவி பறிமாறவும்.

* உருளைக்கிழங்கு வருவல், துவயலுடன் சாப்பிடலாம்.

ஆட்டு கால் சூப்பு, எலும்பு ரசம்   Leave a comment

ஆட்டு கால் சூப்பு, எலும்பு ரசம்

செய்யத்தேவையானவை:

ஆட்டு எலும்பு: 1/4 கிலோ,கொழுப்பு விருப்பபட்டால் சேர்த்துக்கொள்ளாம்.

இஞ்சி,பூண்டு விழுது-2 மேசைக்கரண்டி

இஞ்சி-சிறு துண்டு(தட்டிக்கொள்ளவும்)

சாம்பார் வெங்காயம்- 10(சிறிதாக தட்டிக்கொள்ளவும்)

பூண்டு- 8 பல் (சிறிதாக தட்டிக்கொள்ளவும்)

சோம்பு-1 மேசைக்கரண்டி(லேசாக அரைத்துக்கொள்ளவும்)

சிரகம்-1 மேசைக்கரண்டி(லேசாக அரைத்துக்கொள்ளவும்)

மிளகு-2 மேசைக்கரண்டி(லேசாக அரைத்துக்கொள்ளவும்)

மஞ்சள் தூள்-2 தேக்கரண்டி

மிளகாய் தூள்-காரத்துக்கு

மல்லி தூள்-1 மேசைக்கரண்டி

மல்லி இலை- 1 பிடி

கறிவேப்பிலை- 1 கொத்து

புதினா இலை- 1 கொத்து(விரும்பினால்)

தக்காளி -3 நறுக்கியது

நல்ல யெண்ணை-3 மேசைக்கரண்டி

தேங்காய் அரைத்தது -2 தேக்கரண்டி(விருபினால்)

உப்பு தேவைக்கேற்ப

செய்முறை: குக்கரில் சிறிது நல்ல யெண்ணை ஊற்றி தட்டிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, இஞ்சிப்பூண்டு விழுது சோம்பு, கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும், இதனுடன் நறுக்கிய தக்காளி  சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்(அடுப்பை சிறியத்தீயில் வைத்து செய்யவும்) இதனுடன்

கழுவி மஞ்சள்  தடவிய ஆட்டு எலும்பு/ஆட்டுக்கால்,கொழுப்பு விருப்பபட்டால் சேர்த்து வதக்கி கொள்ளாவும், இதில் அரைத்த சிரகம்,மிளகு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள், மல்லி தூள், மல்லி இலை, உப்பு சேர்த்து லேசாக வதக்கவும் இதில் மூண்று மடங்கு தண்ணீர் ஊற்றி குக்கரில் 10 விசில் வரும்வரை வைக்கவும்.

குக்கரை ஆறவிடவும், பின்னர் இதில் மீதமுள்ள பச்சை நல்ல யெண்ணை, (விருப்பினால்  தேங்காய் அரைத்தது  சேர்த்து ஒரு நிமிடம் அடுப்பில் வைத்து எடுக்கவும்) காரத்திற்க்கு எற்றவாறு மிளகுத்தூள், மல்லி தழை சேர்த்து பறிமாறவும்.(இதே முறையில் நாட்டுக்கோழி சூப்பும் செய்யலாம்.)

காதல் கடமை !!!!!   2 comments

சிறுக சிறுக சீராய்

செய்த சிறிய கூடு ஒன்றில்,

தான்

சுமந்த சுமையை சுகமாய்

இறக்கியது தாய் குருவி

தன் வண்ணக்கனவுகளால்

வண்ணம் தீட்டி வந்தது

குட்டிக்கு

படிப்பு முடிந்தது சிறகு முளைத்தது

பணம் வந்தது பறக்கபழகியது,

பருவம் வந்தது துணை தேடியது

உயிராய் வளர்த்த உறவை

உதற துடித்தது

புதிய உறவுகள்,புதிய கனவுகள்

எல்லாம் நிழலே

என்றும் எதுவும் புதிது இல்லை

எதுவும் நிந்தரம் இல்லை

இது ஏன் உனக்கு புரியவில்லை

கருவறை கடன்கள்

காலதாமதமாகின்றது !!

என்றாவது திருடன் வருவான் என

காத்திருக்கும் காவல்காரன் போல்

பாதி இராத்திரியில் விழித்திருக்கும்

தாயின் ஏக்கம்

தகப்பனின் பெருமூச்சு

முதுமையும், தனிமையும்

உனக்கும் திரும்பும்

காலம் செல்லுமுன்

கடமையை செய்

காதிருக்கும் காதல் மனதுக்கும்

கனிவான கருனை மனதிற்க்கும்

உள்ளுக்குள் இருப்பது

அன்பே..

இரண்டும் ஒரே தராசின்

இரு தட்டுக்கள்

Posted January 26, 2010 by tamilachi in கவிதைகள்

Tagged with

களவாகி போனவள்….   Leave a comment

களவாகி போனவள்

எத்தனை  முறை பார்த்தாலும்

என் அத்தனை முக திரையை கிழித்து

உன்னை என்னில் பதித்து

உன் கர்வச்சிரிப்பில்

என் ஆறடியை அங்குலம் அங்குலமாக

அளவெடுத்து அகம் புகுந்து

உன் கடை கண்ணால்

என் இருதயத்தை உயிரோடு அறுக்க

தெரிந்தவள்

நீ….

ரணத்தோடு விட்டுவிட்டு

எங்கே போனாய்…

நாம் நடந்த பாதையில்

ரகசியமாய்..

தேடுகிறேன்..

உன் காலடியை

தூரத்தில் தொலைந்து போன

நம் காதலையும்…

Posted January 25, 2010 by tamilachi in கவிதைகள்

Tagged with ,

மட்டன் மிளகு கறி   1 comment

மட்டன் மிளகு கறி

தேவையானவை:

ஆட்டு கறி- 1/4 கிலோ

சாம்பார் வெங்காயம்-15 (சிறிதாக நறுக்கியது)

பூண்டு-15 பல்(சிறிதாக நறுக்கியது)

இஞ்சி-1 துண்டு

பச்சை மிளகாய்-(நறுக்காமல்)

மிளகு தூள் – 2 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள்-2 மேசைக்கரண்டி

தனியா(மல்லி) தூள்- 2 மேசைக்கரண்டி

சீரகத் தூள்- 2 தேக்கரண்டி

சோம்பு-1 மேசைக்கரண்டி

கறம் மசாலா தூள்- 2 தேக்கரண்டி

இஞ்சி,பூண்டு விழுது-2 மேசைக்கரண்டி

தேங்காய் அரைத்தது- 2 மேசைக்கரண்டி

மல்லி தழை- 1 பிடி

கறிவேப்பில்லை-1 கொத்து

உப்பு- தேவைக்கேற்ப

யெண்ணை- 3 மேசைக்கரண்டி

செய்முறை: குக்கரில் சிறிது யெண்ணை ஊற்றி காய்ந்ததும் கழுவியக்கறியை  அரை உப்பு, மஞ்சல்,சிறிது இஞ்சி துண்டு (தட்டி), சேர்த்து வதக்கவும், கறி மூழ்கும்வரை தண்ணீர் ஊற்றி 5-7 விஸில் குக்கரில் வைக்கவும்.

வாணலியில் யெண்ணை ஊற்றி சூடாக்கவும், அதில் சோம்பு தாளித்து, இஞ்சி,பூண்டு விழுதை வாசம் போகும் வரை வத்க்கவும், பின்னர் நறுக்கிய வெங்கயத்தை சேர்த்து வதக்கவும், கறிவேப்பில்லை, பச்சை மிளகாய், சேர்க்கவும், அடுப்பை சிறிய தீயில் வைத்து மிளகு தூள்,மஞ்சள் தூள், தனியா(மல்லி) தூள், மேசைக்கரண்டி, சீரகத் தூள், கறம் மசாலா தூள் எல்லாம் சேர்த்து கிண்டவும்

இதில் வேகவைத்த கறியை சேர்க்கவும், உப்பு, தேங்காய் சேர்த்து கொதிக்கவிடவும். யெண்ணை வெளியெ வ்ரும் போது அடுப்பிலிருந்து இறக்கி மல்லித்தழை தூவி பரிமாறவும்.

வெண்பொங்கல்   4 comments

வெண்பொங்கல்

 

செய்ய தேவையானவை: பச்சரிசி 1 கப்

பாசி பருப்பு: 1/2 கப் அல்லது 3/4 கப்

பெருங்காயப் பொடி-1 தேக் கரண்டி

மிள்கு-1 மேசைக்கரண்டி

சிரகம்-1 மேசைக்கரண்டி

இஞ்சி-1/2 இன்ஞ்

கறிவெப்பில்லை-1 கொத்து

முந்திரி-10

நெய்- 3 மேசைக்கரண்டி

உப்பு-தேவைக்கேற்ப

செய்முறை: ஒரு கனமான பாத்திரத்தை சூடாக்கி, அதில் அரிசி, பருப்பு இரண்டையும் சேர்த்து லேசாக வசனை வரும்வரை வறுத்து, தண்ணீரில் களைந்துக்கொள்ளவும்.

குக்கர் அல்லது பாத்திரத்தில் 3 மடங்கு தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிடவும்,

கொதிவந்ததும் களைந்த பருப்பு,அரிசி,சிறிது பெருங்காயம், சிறிது உப்பு சேர்த்து வேகவிடவும். குக்கர் என்றால் 5 விஸில் வரை வைக்கவும், பாத்திரத்தில் வைத்தால் நன்கு வெந்து மசியும் வரை வைக்கவும். பின்னர் கரண்டியால் நன்கு மசித்து விட்டு குழைய இருக்கும்படி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் ஊற்றி மிளகு, சீரகம், முந்திரி தாளித்து அத்துடன் இஞ்சி, கறிவேப்பில்லை, சேர்த்து வெந்த சாதத்தில் சேர்த்துக் கிண்டவும்,

உப்பு தேவையான அளவு சேர்க்கவும், பொங்கல் மேல் மல்லி இலை தூவி, மீதம் உள்ள நெய்யை சேர்க்கவும்.

சுவையான, மனமான வெண்பொங்கல் தயார்.

*அரிசி,பாருப்பை வருக்காமலும் போடலாம்

செய்யா ஆகும் நேரம்: 25 நிமிடம்.

சக்கரை பொங்கல்   1 comment

சக்கரை பொங்கல்

தேவையானவை: பச்சரிசி-1 கிலோ

பாசிப்பருப்பு-1/2 கிலோ

வெல்லம்-3/4 கிலோ

நெய்-150 கிரம்

பச்சைக்கற்பூரம்- ஒரு பிஞ்ச்

கிஸ்மிஸ்-10 கிரம்

முந்திரி-10 கிரம்

எலக்காய்- 7 நுனிக்கியது

ஜாதிக்காய்-சிறிது(நுனிக்கியது)

பால்- 1/4 லிட்டர்

தண்ணீர்-3 பங்கு

செய்முறை: பொங்கல் பானையில்

மூன்று பங்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும், கொதிவந்ததும் அரிசி, பாசிபருப்பயையும் கழைந்து, அதில் சேர்க்கவும், அரிசி பருப்புக் கலவை நன்கு வேந்து மசியும் வரைக்காத்திருக்கவும், மற்றொரு அடுப்பில் வெல்லத்தை உடைத்து வெல்லம் மூழ்கும்வரை தண்ணீர்விட்டு கொதிக்கவிட்டு வடிக்கட்டி சாதத்துடன் சேர்க்கவும், பச்சைகற்பூறம்,ஜாதிக்காய் தூளை அதில் சேர்க்கவும், நன்கு கிளறி மூடவும், அடுப்பயை அனைத்து பால் சேர்க்கவும், பின்பு வேறுபத்திரத்தில் நெய் ஊற்றி கிஸ்மிஸ,முந்திரி, எலக்காய் தாளித்து பொங்கலில் சேர்க்கவும்.

*தேங்காய்த்துருவலை விருப்பபட்டால் சேர்க்கலாம்

*சுவையான சக்கரை பொங்கல் தயார்.

மெது வடை   3 comments

உழுந்து-1 கப்

பச்சரிசி மாவு-1 மேசைக்கரண்டி.

சீரகம்-1 தேக்கரண்டி

மிளகு- 1 தேக்கரண்டி

மல்லி இலை- சிறிதாக நறுக்கியது

கருவெப்பிள்ளை- சிறிதாக நறுக்கியது

சின்ன வெங்காயம்- 4 சிறிதாக நறுக்கியது

காரட்,கோஸ்-துறுவியது(விருப்பப்ட்டால்)

உப்பு-தேவையான அளவு

யெண்ணை- பொறிப்பதற்க்கு

செய்முறை: உழுந்தை களைந்து 1/2 மணி நேரம் ஊறவிடவும், தண்ணீர்விடாமல்(சிறிது தெளித்துக்கொள்ளலாம்) நன்றாக பொங்கிவரும் வரை அறைத்து எடுக்கவும்.

வடை மாவில் பச்சரிசி மாவு,சீரகம்,மிளகு,மல்லி இலை, கறுவெப்பிள்ளை, சின்ன வெங்காயம் சிறிதாக நறுக்கியது,காரட்,கோஸ்-துறுவியது,உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

வாணலியில் யெண்ணை ஊற்றி யெண்ணை காய்ந்ததும், மிதமான தீயில் வைக்கவும்.

பாலிதின் பேப்பர் அல்லது இலையில் யெண்ணை தடவி, அதில் கொஞ்ம் வடை மாவை வைத்து தட்டி துளையிட்டு, பொண் நிறமாக பொறித்து எடுக்கவும்.

  • வடையை போட்டவுடன் திருப்பக்கூடாது சிறிது வெந்தவுடன் லெசாக திருப்பவும்.

* வடை ஒன்றொடு ஒன்று ஒட்டும்படி போடக்கூடாது

கேசரி   Leave a comment

கேசரி

தேவையானவை

ரவா-1 கப்

சீனி -1.1/கப்,அல்லது2 கப்

தண்ணீர்- 3  கப்

நெய்-3 கப்

தேங்காய் யெண்ணை-1 மேசை கரண்டி

எலக்காய்- 4/வெண்ணிலா யெசன்ஸ்

குங்குமப்பூ- 3(பாலில் ஊரவைத்தது)

முந்திரி, பாதாம், கிஸ்மிஸ் விரும்பிய அளவு

கேசரி களர்-1 சிடிகை

அன்னாசி பழம் (பைன்னப்பிள்) -1/4 பழம் விருப்பபட்டால்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் ரவையை சிறிது நெய் ஊற்றி பச்சை வாசம் போகும் வரை நிறமாறமல் வறுத்து ஆறவிடவும்.

அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய் ஊற்றி 3 கப் தண்ணீர் ஊற்றி,2 அல்லது 3 பங்கு சீனி,அன்னாசி,கேசரி கலர் சேர்த்து, கொதிக்கவிடவும், கொதிவந்ததும், ஒரு பக்கமாக வருத்து ஆறிய ரவையை கொஞ்சம், கொஞ்சமாக கட்டி விடாமல் சேர்க்கவும்( கட்டி இருந்தால் உடைத்து விடவும்) அடுப்பை மிதமான தீயில்வைத்து ரவையை வேகவிடவும்(குங்குமப்பூவை சேர்க்கலாம்), வேகும்போதே சிறிது நெய், தேங்காய் யெண்ணையை சுற்றி விடவும், கேசரி இளக்கம் கொடுக்கும் வெந்ததும் மிதம் உள்ள நெய்யை சேர்க்கவும், பாத்திரத்தில் சிறிது நெய் ஊற்றி எலக்காய், முந்திரி, பாதாம், கிஸ்மிஸ் சேர்த்து தாளித்ம் செய்து கிளறவும்.

*சுவையான கேசரி தயார்

தயிர் சாதம்   Leave a comment

தயிர் சாதம்

தேவையானவை: பச்சரிசி – குழைய வெகவைதது(1:3 தண்ணீர்)

பெருங்காயம்-2 சிட்டிகை

கடுகு-1 தேக்கரண்டி

உழுந்தம் பருப்பு-1 தேக்கரண்டி

கடலை பருப்பு-1 தேக்கரண்டி

மிளகாய் வறற்ல்-5

பச்சை மிளகாய்-2(பொடியாக நறுக்கியது)

கறிவெப்பிள்ளை-1 கொத்து

மல்லி இல்லை- 1 பிடி(பொடியாக நறுக்கியது)

மாதுளை பல்-  கொஞ்சம்

காரட்-1 பொடியாக நறுக்கியது/துறுவியது

கருப்பு திராட்சை-10

தயிர்- 1கப் (புளிக்காதது)

பால்-1 கப்

உப்பு- தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில் சாதத்தை குழைய வேகவைக்கவும்,

ஒரு பாத்திரத்தில் சாத்தை மாற்றி குழைய மசித்து, ஆறவிடவும், தயிரை அடித்துக்கொள்ளவும், சாததில் தயிர்,காய்ச்சி ஆறிய பால் உற்றி பெருங்காயம், உப்பு சேர்த்து கிளறிக்கொள்ளவும்,

காரட்(துறுவியது), திரட்சை,மாதுளை,பச்சைக்கறிவேப்பிலை,மல்லி இலை ஆகியவை சேர்த்து,லேசக கிளரவும், பாத்திரத்தில் யெண்ணை ஊற்றி கடுகு, உழுந்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை தாளித்து மேலே கொட்டவும்.

சாதம் கெட்டியாக இருந்தால் சுடு தண்ணீர் சேர்க்கலாம்

பசி பயமறியாது   1 comment

என் உயிர் தோழா!!   Leave a comment

என் உயிர் தோழா!

ஏய், நீ நீதான்…

ஏய், உன்னைத்தான்

அவன், சட்டென திரும்பி

அவசரமாய் பேருந்தில்,என் கை தவறிய

புத்தகதை பிடிக்க

சில்லறை இல்லாமல் தவிக்கும் போது

எனக்காக சீட்டெடுக்க,

அடிக்கும் வெயிலுக்கு 6-5ஜுஸ் வாங்கி

கொடுக்க,

மாலைக்கு இதமாய் என்னோடு

தேனீர் பருக

பிரயாணங்கலில்

தோழ்சாய்த்து துயில

மாலை மங்கிய வேலையில்

நடை பாதையில்

அவரவர் காதல் நினைவுகளுக்கு

ஆறுதல் சொல்லிக்கொள்ள

சிறியத்தயக்கத்தோடு பிரியுபோதும்

இரவில் கைபெசியில் விசாரித்த பின்

செய்தி அனுப்ப

விடியும் முன் வாழ்த்து தெரிவிக்க

தேவை

நீ நீ தான்!!!

நீ நல்லவனா?, இல்ல கேட்டவனா?

எப்படியிருந்தாலும் இப்போதைக்கு

நீ என் நண்பன்

நாளை நமதே!!!

மிக்ஸ்டு வெஜ்ஜிடபிள் ரைஸ்   Leave a comment

மிக்ஸ்டு வெஜ்ஜிடபிள் ரைஸ்:

தேவையனவை: பாசுமதி அரிசி/பச்சரிசி 1 கப்
காரட்
காலிஃப்லவர்
உருளைக் கிழங்கு
பின்ஸ்
முட்டைக் கோஸ்
பச்சை பட்டானி’
அனைத்தையும் சேர்த்து 1 கப்
வெங்காயம் பெரியது-1
எழும்பிச்சை-1
பச்சை மிளகாய்-4(இரண்டாக கீறிக்கொள்ளவும்)/மிளகு
இஞ்சி,பூண்டு விழுது- 2 தேக்கரண்டி
கொத்த மல்லி தழை- 1 சிறிது
நெய்/ ரிஃபைண்ட் ஆயில்- 2 மேசைக்கரண்டி
தாழிதம் செய்ய: சோம்பு, விருப்பப்ட்டாள்(பட்டை,கிரம்பு,பிரிஞ்ஜி)
உப்பு-தேவையான அளவு

செய்முறை: அரிசியை வெறும் வானில் லெசாக வருக்கவும், பின்னர் தண்ணிர் ஊற்றி கழைந்து பத்து நிமிடம் ஊறவிடவும், அடி கணமான பாத்திரம்/ குக்கர் ஃபென்னில் சிறிது நெய்/ ரிஃபைண்ட் ஆயில் ஊற்றி  சோம்பு, விருப்பப்ட்டாள்(பட்டை,கிரம்பு,பிரிஞ்ஜி) தாழித்து
வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்,இஞ்சி,பூண்டு விழுதை அதனுடன் சேர்க்கவும், பச்சை வசம் போகும்வரை வதக்ககி அதனுடன் காய்கறிகளை சேர்த்து வதக்கவும், அரிசியை நீர் வடித்து அதனையும் சேர்த்து வதக்கவும், உப்பு சேர்த்து 2 நிமிடம் மூடி சிறிய தீயில் வைக்கவும்.
1,1/2 கப் தண்ணிர் சேர்த்து நன்கு கொதி வந்ததும் மீண்டும் சிம்மில் வைத்து மூடவும்( குக்கர் ஃபென்னில் வெட்யில்லாமல்) பத்து நிமிடத்தில் சாததை இறக்கி, எழும்பிச்சை சாற்றையும், மல்லித் தழையை சேர்க்கவும்.

உருளைக் கிழங்கு சிப்ஸ்/ரைத்தா சேர்த்து சாப்பிடலாம்.

புளியோதரை   Leave a comment

புளியோதரை

தேவையானவை: அரிசியை உதிரியாக வடித்துக்கொள்ளவும்- 1 கப்
புளி- 1 எழும்பிச்சை அளவு
மஞ்சல் தூள்- 2 தேக்கரண்டி

வறுத்து பொடிக்கவேண்டியவை: வெந்தயம்- 2 தேக்கரண்டி & கட்டி பெருங்காயம் சிறியதுண்டு,சிறிது யெண்ணை  ஊற்றி தனியாக வறுத்து பொடித்து கொள்ளவும், தனியா-2 தேக்கரண்டி, வெள்ளை எள்ளு-2 தேக்கரண்டி,வானியில் சிறிது யெண்ணை  ஊற்றி இதைத்தனியாக வறுத்து பொடித்து கொள்ளவும்.

தாளிக்க: நல்ல யெண்ணை- 4 மேசைக்கரண்டி
கடுகு, உழுந்து, கடலை பருப்பு,முந்திரி, நிலக்கடலை பருப்பு
கறிவேப்பிலை- 1 கொத்து
வற மிளகாய்- 6
உப்பு- தேவைக்கேற்ப

செய்முறை: முதலில், சிறிது தண்ணீரில் புளி, மஞ்சல் தூள், உப்பு சேர்த்து பிசைந்து வடிகட்டிக்கொள்ளவும்.
வானியில் 2 தேக்கரண்டி யெண்ணை ஊற்றி வறுத்து பொடித்த வெந்தயம்,பெருங்காயம், கடுகு, உழுந்து, கடலை பருப்பு,முந்திரி, நிலக்கடலை பருப்பு வற மிளகாய் எல்லாம் சேர்த்து பொறியவிடவும். இதில் புளித்தண்ணிரை சேர்த்து யெண்ணை வரும்வரைக்கொதிக்கவிடவும்.

சாதத்தில் கறிவேப்பிலை, வறுத்து நைஸாக பொடித்த வெள்ளை எள்ளு, தனியா பொடியை சேர்த்து கிளறவும், பின்னர் புளிக்கூட்டை சேர்த்து கிளறி, மீதமுள்ள பச்சை நல்ல யெண்ணை சேர்த்து மூடவும்.

மிகவும் சுவையான புளியோதரை தயார்.

கிறுக்கன் !! அவன் கலைஞன்   Leave a comment

கிறுக்கன் !! அவன் கலைஞன்

உன்னை கிறுக்கன் என்றார்கள்,
நீ கிறுக்கியதை ஊரே கண்டதே

உன்னை காணவேண்டும் என்று
விரைந்த போது
தோல்வியே

எப்படியடா? உடைந்த சுவற்றிலே
உயிருள்ள ஓவியம்

கேள்விப்பட்டேன்
மண், செம்மண், செங்கல், கரி, இலை
குப்பை இவைகள் தான்
உன் சித்திரதித்ன் மூலப்பொருட்களாமே..

சிலர் போற்ற, பொருள் ஈட்ட
குளிர் பெட்டியில் வைத்து
அல்ல உன் அரங்கேற்றம்

ஊர் பார்க்க வாய் பிளக்க
மக்கள் மேடையில் அரங்கேறியதை
நான் பார்க்காமல் போனெனெ

உன் சித்திரம் காட்டியது
உனது நகலை
எத்தனை நேர்த்தி, எத்தனை கூர்மை !!!

அழுக்கேறிய உடலும், கரை நிறைந்த்
கந்தல் உடுப்பு,,
நெடிய சடை முடியும்
சிவந்த விழியும்,
நான் இன்றும் தெருக்கலில் தேடுகின்றேன்

நீ கிறுக்கனா இல்லை கலைஞனா? என்ற பட்டிமன்றத்தில்
என்னை கிறுக்காக்கிய கலைஞனடா !!!

என் தேடல் இன்னும் தொடர்கிற்து..
தொடர்புக்கு” தமிழச்சி.வர்ட்பிரஸ்.காம்”

வியாபாரம்   Leave a comment

சந்தை   Leave a comment

தனிமை   Leave a comment

வர்ணம்   Leave a comment

வழி   Leave a comment

தாமரை   Leave a comment

சருகுகல்   Leave a comment

எதிர் நீச்சல்   Leave a comment

மூங்கில்   Leave a comment

மலர்கலே   Leave a comment

முறுக்கு : ஸ்விட் சுருள் முறுக்கு /மடக்கு   2 comments

முறுக்கு : ஸ்விட் சுருள் முறுக்கு /மடக்கு

தமிழ் நாட்டில் பட்டுக்கோட்டை, தஞ்சை, வேதாரண்யம் ஆகிய இடங்களில் இப்பலகாரம் மிகவும் பிரசித்தம்

தேவையானவை: பச்சரிசி மாவு-1 கப்
உழுந்து வருத்து பொடி செய்தது-1/4 கப்
பாசி பருப்பு வருத்து பொடி செய்தது-1/4 கப்
வஸ்பதி/வெண்ணை-1 தேக்கரண்டி
உப்பு-சிறிதளவு
வெள்ளை எள்-1 தேக்கரண்டி

சீனி பாகுக்கு: 1கப் சீனி
தண்ணீர்-சீனி மூழ்கும் வரை

பொறிபதற்க்கு:  எண்ணெய்

செய்முறை: பச்சரிசி மாவு, உழுந்து வருத்து பொடி செய்தது, பாசிபருப்பு வருத்து பொடி செய்தது, வஸ்பதி/வெண்ணை, உப்பு, வெள்ளை எள், அகியவற்றை, தண்ணீர் சிறிது, சிறிதாக சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும், சிறிய உருண்டைகளாக செய்து, சப்பாத்தி கல்லில் தேய்க்கவும், சிறிய பூரிகளாக தேக்காவும், தேத்த பூரிகளை சுருட்டி ,  ஒவ்வொன்றாக பொறிக்கவும். பொன் நிறமாக பொறித்து தனியெ வைக்கவும்.

ஒரு அடி கனமான பத்திரத்தில் சீனியை அதன் மேல் மூழ்கும்வரை தண்ணீர் ஊற்றவும், பாகு கொதித்து ஒரு கம்பிப்பததிற்க்கு வரும் வரை வைக்கவும்.

ஆறிய சுருள் முறுக்கு மேல் ஊற்றி நன்கு குலுக்கி எல்லா சுருள் மீது படுமாரு பிரட்டவும், சூப்பரான சுருள் ஸ்விட் முறுக்கு தயார்.

மனம் காண வருவாயா?!!!   Leave a comment

மனம் காண வருவாயா?!!
அன்று ஞாற்றுக்கிழமை
மதியம் இருவரும்
கிணற்றடியில்
கைகளை மூடிக்கொண்டு இதுல aadu
என்னயிருக்குன்னு கண்டு பிடி
நீ மொதல சொல்லு,
இல்ல, நீதான் மொதல, சொல்லு
இருவரும் சில்லறையாய் சிரிக்க
எனக்கு மீன் கொழம்பு,உன்னக்கு?
கறிக்கொழம்பு..
இருவீட்டு மணமும் மாற்றிக்கொள்ள
சம்மதம்
இன்று
அவள் வீட்டில் கறிக்கொழம்பு
மாப்பிளை வர்ராருளா!!
என் மணம்
கொதித்தது  கோழிக்குழம்பாய்
ஒரு மனமும் நம் மணதை அறியவில்லை…
இருப்பினும் உன் வீட்டு முதல் பந்தியில்
நான்,  மாப்பிளைத் தோழனாய்
இன்றும் கையில் கொழம்பு மன(ண)த்தை
மூடியவாரு நான் மட்டும் என்
திண்ணையில்…

Posted November 15, 2009 by tamilachi in கவிதைகள்

Tagged with , ,

மணதுக்கு புரிவதில்லை..   Leave a comment

மணதுக்கு புரிவதில்லை..

அறிவுக்கு தெரிவதில்லை
ஏற்றத்தாழ்வு
பாமரன், பசித்தவன்,     flower
தாழ்ந்தவன் என்று

வஞ்சகமில்லா இறைவனின்
வான் மழை போல்
பாவம் இந்த பாவிக்கா இத்தனை அறிவு
என அப்பா..

ஒவ்வொரு முறை பண்ணை வீட்டில்
எம் பொருள் ஒன்று சொந்தமாகி போக

அம்மாவின் முந்தானை சில்லறை,
குழுதாழி சேமிப்பு, கழை, விறகு கூலி,

இவைகளால் அடங்வில்லை
என் கல்வி கட்டணம்
மீதத்திற்க்கு பெறப்பட்டது
வங்கி கடன்

தகபனின் தடுமாற்றமும்,
தாயின் ஒடுங்கி,நடுங்கிய உடலும்,
எனக்காக தன் படிப்பை இழந்த தமக்கையும்,
எல்லோர் கண்களில், என்  மீதுத் தூங்கா கணவுகளும்
கண்ணீரும்,கணத்த பெறுமூச்சும்..

எதிர் காலத்து ப்பகலை நம்பி
என் நிகழ் காலத்து பசியையும்,வறுமையும்

அடக்கமுற்பட்டது..

அதை கண்டு ஆவேசதில் மணதில்
நான் செய்த சபதங்களும், சத்தியங்களும்
பேருந்தில் ஏறி சன்னல் அருகே
அமரும் வரையில் தான்
ஸ்.. அப்பா என்று கண் மூட
அவள் வந்து நின்றாள்
கூடவே அவள் காதலும்
சே.. இந்த காதலுக்கு

புரிவதில்லை..

தெரிவதில்லை ஏற்றத்தாழ்வு…

வானத்தில்   1 comment

வானத்தில்moon

பாட்டி சுட்ட அப்பளம்

மீதம் ஒண்ணு  இருக்குது

பாப்பா திண்ணுப் போட்டது

கிழே சிதறிக்கிடக்குது.

 

Posted November 15, 2009 by tamilachi in கவிதைகள்

Tagged with ,

சமொசா ஸ்வீட்   Leave a comment

சமொசா ஸ்வீட்
செய்ய தேவையானவைIMG0418A
மைதா மாவு-1 கப்
சிரோடி ரவை-1/2 கப்
வெண்ணை-1 மேசை கரண்டி
உப்பு-தேவைக்கேற்ப்ப

புரணம் செய்வதற்க்கு: தேங்காய் துருவல்-4 தேக்கரண்டி
பொட்டுக்கடலை-4 தேக்கரண்டி
சீனி -4 தேக்கரண்டி
எலக்காய்-4
சுக்கு-1/2 இஞ்
எண்ணெய் பொறிப்பதற்க்கு.

புரணம் செய்யும் முறை:   தேங்காய் துருவலை வாணலியில் சிறிது நெய் ஊற்றி வறுக்கவும், பொட்டுக்கடலை,சீனி ,எலக்காய், சுக்கு சீனி சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும், பின்னர் வறுத்த தேங்காய் துருவலையும் சேர்த்து புரணம் தயார் செய்யவும்.

பூரி செய்ய:  மைதா மாவு, சிரோடி ரவை, வெண்ணை ,உப்பு-தேவைக்கேற்ப்ப சேர்த்து, தண்ணீர் சிறிது,சிறிதாக  விட்டு பிசையவும்,
மாவு பூரி பதத்திற்க்கு வந்ததும், (மெருதுவாக பிசையவும்) சிறு, சிறு பூரிகளாக தேய்க்கவும்,

சமொசா அச்சு இருந்தாள் அதில் வெண்ணை தடவி தேய்த்த பூரியை பரப்பி, அதில் சிறிது புரணத்தை வைத்து மூடவும், ஓரங்களில் சிறிது தண்ணீர் வைத்து ஒட்டவும்,

அச்சு இல்லை என்றால்  பரவாயில்லை, சிறிய வட்ட பூரிகளாக செய்து அதில் புரணத்தை வைத்து  ஓரங்களில் சிறிது தண்ணீர் வைத்து ஒட்டவும்,
எண்ணெயில் மிதமான சூட்டில் பொறித்து எடுக்கவும்.

நன்றாக ஆறியப்பின், காற்று புகாமல் பாத்திரதில் மூடி வைக்கவும்,இந்த சமொச ஒரு மாதம் வரை கெடாது.

குடை   Leave a comment

குடை

கார் கண்னாடியில்

உன் பெயர் எழுதிவைத்து10

ரசித்திருந்தேன் மழையில்

மழை உன் பேரை  நனைத்த போது

உள்ளுக்குள் குளிர்ந்தேன்
அவைகள் உன் பெயரை அழிக்க….
சட்டென கரம் நீட்டி
குடையாய்ப்பிடித்தேன்

உன்னக்கே குடைப்பிடிப்பதாய்
ஓர் நினைப்பு
ஆகா என் இரு கரங்களிலும்
உன் பெயரை எழுதிய மை
மழையெ நீ வாழ்க!!

மழை ஒரு தொடர் கதை…   1 comment

மழை ஒரு
தொடர் கதை..
11

அன்று சிறுவனாய் நான்
அம்மாவுக்கு தெரியாமல்
கதவு கம்பிகளில் ஊஞ்சல்
ஆடியபடி வழியும்
மழை நீரை பருகிய ருசி
தொடர்கிறது…
இன்று சிறுவனான என் மகனும்
அம்மாவுக்கு தெரியாமல்…

ஏய்!! ஏண்டா ஓன் அப்பா மாதிரியே இருக்க
இல்லமா
என்று தான் விட்ட வேலையை தொடர….
எனக்குள் எழுந்தது நமட்டு சிரிப்பு
மழை நீரும் இனித்தது.

Posted November 12, 2009 by tamilachi in கவிதைகள்

Tagged with ,

Follow

Get every new post delivered to your Inbox.